< Back
ஓ.டி.டி.
வேட்டையன் படத்தின் ஓ.டி.டி உரிமத்தை பெற்ற பிரபல நிறுவனம்
ஓ.டி.டி.

'வேட்டையன்' படத்தின் ஓ.டி.டி உரிமத்தை பெற்ற பிரபல நிறுவனம்

தினத்தந்தி
|
12 Oct 2024 7:02 AM IST

இத்திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த 'வேட்டையன்' திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. 'ஜெய் பீம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்த இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது.

அதே சமயம் 33 வருடங்களுக்கு முன்பாக 'ஹம்' என்ற இந்தி படத்தில் இணைந்திருந்த ரஜினி மற்றும் அமிதாப் கூட்டணி, மீண்டும் இணைந்துள்ளதும் படத்தின் மற்றொரு எதிர்பார்ப்புக்கு காரணம். இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களான இவர்கள் இருவரும் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அடுத்தது பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுண்டர் குறித்தும் பேசுகிறது. இந்தநிலையில் இந்த படம் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. படத்தின் ஓடிடி உரிமையை 90 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இதற்கு முன் வெளிவந்த ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' திரைப்படமும் அமேசான் பிரைம் தான் வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஓடிடி ரிலீஸ் இன்னும் 1 மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்