'டார்லிங்' படத்தின் ஓடிடி குறித்த தகவல்
|பிரியதர்ஷி புலிகொண்டாவின் 'டார்லிங்' படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
பிரபல தெலுங்கு நடிகர் பிரியதர்ஷி புலிகொண்டா. இவர் மல்லேசம் , மித்தாய் மற்றும் அஞ்சல் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இவர் 'டார்லிங்' என்ற படத்தில் நடித்துள்ளார். பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோரால் இப்படம் ரூ. 6 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவேக் சாகர் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தில் நடிகை நபா நடேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அனன்யா நாகல்லா, மொயின், சிவா ரெட்டி, முரளிதர் கவுட், பிரம்மானந்தம் மற்றும் கலினி ராஜ் ஆகிய முன்னனி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் டிரெய்லர் கடந்த ஏப்ரல் 21-ந் தேதி வெளியானது.
இப்படம் திரையரங்குகளில் வருகிற 19-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தநிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இப்படத்தின் ஓடிடி உரிமையை ரூ. 6 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இப்படம் வெளியாகும் முன்பே செலவான தொகையை பெற்றிருக்கிறது. மேலும், அடுத்த மாதம் இரண்டாவது வாரம் இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.