< Back
ஓ.டி.டி.

ஓ.டி.டி.
'பிரம்மானந்தம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

17 March 2025 7:53 AM IST
கடந்த மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'பிரம்மானந்தம்'.
சென்னை,
ஆர்.வி.எஸ். நிகில் இயக்கத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'பிரம்மானந்தம்'. இதில் பிரபல காமெடி நடிகர் பிரமானந்தம் மற்றும் அவரது மகன் ராஜா கவுதம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மேலும், பிரியா வட்லாமணி, வெண்ணேலா கிஷோர், சம்பத், ராஜீவ் கனகலா, தணிகெல்ல பரணி உள்ளிட்ட பலர் நடித்தனர். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.
அதன்படி, வரும் 20-ம் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் 'பிரம்மானந்தம்' வெளியாகிறது.