< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.யில் வெளியானது பிளாக் திரைப்படம்
ஓ.டி.டி.

ஓ.டி.டி.யில் வெளியானது 'பிளாக்' திரைப்படம்

தினத்தந்தி
|
1 Nov 2024 3:35 PM IST

ஜீவாவின் ‘பிளாக்’ திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி உள்ளது.

சென்னை,

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இவர் தற்போது 'மாநகரம், டாணாக்காரன்' போன்ற படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள புதிய படத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாகவும், நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு 'பிளாக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல திகிலூட்டும் காட்சிகள் இந்த டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன.

அக்டோபர் 11ம் தேதி வெளியானபோது சில திரைகளே ஒதுக்கப்பட்டிருந்தன.தொடர்ந்து, படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தெரிவித்திருந்தார். இந்தப் படம் உலகளவில் ரூ. 5 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் டிவிட்டரில் பதிவை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்