< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.யில் வெளியாகும் அந்தகன் திரைப்படம்
ஓ.டி.டி.

ஓ.டி.டி.யில் வெளியாகும் 'அந்தகன்' திரைப்படம்

தினத்தந்தி
|
28 Oct 2024 9:52 PM IST

நடிகர் பிரசாந்த் நடிப்பில் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள 'அந்தகன்' படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.

சென்னை,

'வைகாசி பொறந்தாச்சு' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'அந்தகன்'. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக 'அந்தகன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. அதே சமயம் நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். நடிகை சிம்ரன் படத்தில் வில்லியாக நடித்து மிரட்டியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற 30-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்