< Back
ஓ.டி.டி.
Alien: Romulus horror film to be released on OTT
ஓ.டி.டி.

ஓ.டி.டியில் வெளியாகும் 'ஏலியன்: ரோமுலஸ்' ஹாரர் படம்

தினத்தந்தி
|
30 Sept 2024 12:50 PM IST

'ஏலியன்: ரோமுலஸ்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சயின்ஸ் பிக்சன் ஹாரர் படம் 'ஏலியன்: ரோமுலஸ்'. இந்த படத்தினை 'ஈவில் டெட் மற்றும் டோண்ட் ப்ரீத்' படங்களை இயக்கிய பெடே அல்வாரெஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தினை ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ளார். மேலும் கெய்லி ஸ்பேனி, இசபெலா மெர்சிட், ஸ்பைக் பியர்ன் மற்றும் ஐலீன் வு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் ஐமேக்ஸ் திரைகளில் கடந்த மாதம் 23-ந் தேதி வெளியானது. மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இப்படம் ஏலியன் சம்பந்தமாக உருவாகி அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது. மேலும், ஐமேக்ஸில் வெளியாகி அதிக வசூல் செய்த படமாக இருந்த ஏலியன்: காவ்னெண்ட்டின் சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 13-ம் தேதி முதல் பிரைம் வீடியோ மற்றும் ஆப்பிள் டிவியில் இப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்