'ஐந்தாம் வேதம்' வெப் தொடர் டிரெய்லர் வெளியீடு
|நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள 'ஐந்தாம் வேதம்' வெப் தொடர் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை,
90களின் பிரபலமான 'மர்மதேசம்' தொடரின் இயக்குநர் நாகா, 'ஐந்தாம் வேதம்' என்ற தலைப்பில் ஒரு சீரிஸ் இயக்கியிருக்கிறார். இந்த சீரிஸை அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்திருக்க சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் ஸ்ட்ரீமாகவுள்ளது இந்த வெப் தொடர் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த தொடர் புராணங்களை அடிப்படையாக கொண்ட திரில்லராக உருவாகியிருப்பதை டிரெய்லரின் காட்சிகள் உணர்த்துகின்றன. விறுவிறுப்பாக காட்சிகள் நகர்வதும், அதையொட்டிய மர்மங்களும் தொடர் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. சந்தோஷ் பிரதாப், சாய் தன்ஷிகா கவனம் ஈர்க்கின்றனர்.
இந்தத் தொடர் வரும் 25-ம் தேதி ஜீ5 ஓ.டி.டியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.