< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.
'ஆட்டம்' : தேசிய விருது பெற்ற படத்தை எந்த ஓ.டி.டியில் பார்க்கலாம்?
|18 Aug 2024 12:23 PM IST
'ஆட்டம்' மலையாளத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது.
சென்னை,
ஆனந்த் ஏகர்ஷி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி வெளியான படம் 'ஆட்டம்'. இப்படத்தில் வினய் கோட்டை, கலாபவன் ஷாஜோன், ஜரின் ஷிஹாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படம் வெளியாகி பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
இந்த சூழலில், நேற்று முன்தினம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அதில், சஸ்பென்ஸ் படமான 'ஆட்டம்' மலையாளத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. இந்த படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க தவறியவர்கள் தற்போது ஓ.டி.டியில் பார்க்கலாம். அதன்படி, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உள்ளது.