< Back
ஓ.டி.டி.
5 Tamil films to watch with your siblings on ott
ஓ.டி.டி.

ஓ.டி.டி.யில் உள்ள டாப் 5 சகோதர பாச தமிழ் படங்கள்

தினத்தந்தி
|
6 Aug 2024 7:43 AM IST

தமிழில் உடன்பிறப்புகளின் அன்பு மற்றும் தியாகத்தை அழகாக சித்தரிக்கும் ஏராளமான திரைப்படங்கள் இருக்கின்றன.

சென்னை,

சகோதர சகோதரிகளின் பந்தத்தை கொண்டாடும் வகையில் பல திரைப்படங்கள் அடிக்கடி வெளியாகி கொண்டுதான் உள்ளன. அவ்வாறு தமிழில் உடன்பிறப்புகளின் அன்பு மற்றும் தியாகத்தை அழகாக சித்தரிக்கும் ஏராளமான திரைப்படங்கள் இருக்கின்றன. தற்போது அதில் உள்ள டாப் 5 படங்களை காணலாம்.

1. அண்ணாத்த

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168-வது படமாக உருவானது 'அண்ணாத்த'. இதில் நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். தற்போது இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது.

2. திருப்பாச்சி

கடந்த 2005-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் திருப்பாச்சி. விஜய்க்கு தங்கையாக மல்லிகாக நடித்த இப்படம், கடந்த 2004-ல் வெளியான கில்லி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. தற்போது இப்படத்தை சன் என்எக்ஸ்டி தளத்தில் காணலாம்.

3. நம்ம வீட்டு பிள்ளை

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை. தற்போது இப்படம் சன் என்எக்ஸ்டி தளத்தில் உள்ளது.

4. பாண்டவர் பூமி

கடந்த 2001-ம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் பாண்டவர் பூமி. இயக்குனர் சேரன் இயக்கிய இப்படத்தில், ராஜ்கிரண், ரஞ்சித், மனோரமா, விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்தனர். தற்போது இப்படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் காணலாம்.

5. சமுத்திரம்

சரத் குமார், முரளி நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் சமுத்திரம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படம் தற்போது சன் என்எக்ஸ்டி தளத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்