சரக்குக்கு நாங்க அடிமை இல்ல.. ஊறிப்போன சம்பிரதாயத்துக்கு...! கொடூர லுக்கில் நானி… - தசரா டிரைலர் ...!
|'தசரா' டிரைலர்...! படத்தில் நானி குடி பழக்கத்துக்கு அடிமையான மனதராக நடித்திருக்கிறார் என தெரிகிறது.
சென்னை
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது.
இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த தசரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம். கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டீசர் எப்பட்டி இருக்கு...?
டீசரில் கொடூர கெட்டப்பில் வருகிறார் நானி. மது, புகை, அடிதடி சண்டை என நீளும் டீசரில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் தோன்றி உள்ளார்.டிரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது என்றே கூறலாம். படத்தில் நானி குடி பழக்கத்துக்கு அடிமையான மனதராக நடித்திருக்கிறார் என தெரிகிறது.
டீசரின் இறுதியில் ரத்தக் களறியுடன் நானியின் தோற்றம் படம் பக்கா ஆக்ஷ்ன் டிராமா என்பதை உணரவைக்கிறது.சரக்குக்கு நாங்க அடிமை இல்ல.. ஊறிப்போன சம்பிரதாயத்துக்கு.. என வசனம் பேசுகிறார். எனினும் படத்தின் கதையை கணிக்க முடியாத படி டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
நிலக்கரிக்கு நடுவிலிருக்கும் ஊர் என தொடங்கும் டீசரின் மூலம் படம் அழுத்தமான கதையை உள்ளடக்கியிருக்கும் என உணர வைக்கிறது. படம் மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது படத்திற்கான ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.