லிப்லாக் காட்சியில் நடித்தது ஏன்...! 'இச்' சர்ச்சைக்கு அனிகாவின் 'நச்' பதில்
|லிப்லாக் காட்சியில் நடித்தது குறித்து நடிகை அனிகா சுரேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை
நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வந்தார். இவரை தமிழில் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியது டைரக்டர் கவுதம் மேனன் தான். அவர் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அசத்தி இருந்தார் அனிகா.
இவர்கள் இருவருக்கும் இடையேயான தந்தை - மகள் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனதால் விஸ்வாசம் படத்திலும் அனிகாவை அஜித்தின் மகளாக நடிக்க வைத்தார் டைரக்டர் சிவா.இப்படத்திற்கு பின்னர் அவரை குட்டி நயன் என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.
நடிகை அனிகாவுக்கு தற்போது 18 வயது ஆகிவிட்டதால், அவர் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அந்த வகையில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் புட்ட பொம்மா. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கப்பேலா எனும் காதல் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.
இப்படம் கடந்த பிப்ரவரி 4-ந் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அனிகாவும் முதல் படத்திலேயே ஹீரோயினாக வெற்றி கண்டார்.
இதற்கு அடுத்தபடியாக அனிகா ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் ஓ மை டார்லிங். மலையாளத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். ரொமாண்டிக் திரைப்படமான இதை ஆல்பிரட் டி சாமுவேல் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகவும் வைரல் ஆனது. இதற்கு காரணம் இப்படத்தில் அனிகா ஏராளமான உத்தட்டோடு உதடு கொடுக்கும் லிப்லாக் காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சிகள் டிரைலரிலும் இடம்பெற்று இருந்தன. அதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போயினர்.
இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள், அனிகா, நயன்தாராவையே மிஞ்சிடுவாங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர். சிலரோ டிரைலரிலேயே இத்தனை லிப்லாக் காட்சி என்றால், அனிகா படத்தில் என்னென்ன கவர்ச்சி அட்ராசிட்டி செய்திருக்கிறாரோ என பதிவிட்டு வருகின்றனர். மலையாளத்தில் ஹீரோயினான முதல் படத்திலேயே அனிகா இப்படி நடித்துள்ளது தான் சமூகவலைதளத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.
இந்நிலையில், லிப்லாக் காட்சியில் நடித்தது குறித்து நடிகை அனிகா சுரேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது :
"ஓ மை டார்லிங் முழுநீள காதல் படம். அதில் முத்தக்காட்சி இடம்பெறுவதை தவிர்க்க முடியாத ஒன்று. கதை சொல்லும்போதே இந்த காட்சிக்கான முக்கியத்துவத்தையும் இயக்குனர் சொல்லி இருந்தார்.
கதைக்கு தேவைப்பட்டதால் தான் அதில் நடித்தேன். அந்த காட்சிகளில் துளி அளவு கூட ஆபாசம் இருக்காது. படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கு அது புரியும்" என கூறியுள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று கொச்சியில் நடைபெற்றது. ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ள பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் படத்தின் நட்சத்திரங்கள் அனிகா, மெல்வின், முகேஷ், மஞ்சு பிள்ளை, பக்ரு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஷைன் டாம் சாக்கோ கலந்து கொண்டார்.
விழாவில் திரைக்கதை எழுத்தாளர் ஜினேஷ் உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டனர். ஓ மை டார்லிங் திரைப்படம் வருகிற 24 ந்தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.