< Back
சினிமா செய்திகள்
மையல் படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை சம்ரித்தி தாரா
சினிமா செய்திகள்

'மையல்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை சம்ரித்தி தாரா

தினத்தந்தி
|
12 Sept 2024 11:50 AM IST

நடிகை சம்ரித்தி தாரா அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பல பட்டங்களை வென்றவர்.

சென்னை,

மலையாள சினிமாவில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்து வருபவர் சம்ரித்தி தாரா. இவர் பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பல பட்டங்களை வென்றவர். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே புகழ்பெற்றவர் நடிகை சம்ரித்தி. மாத்ருபூமி மிஸ் க்ரிஹலக்ஷ்மி பேஸ் கேரளா (2019) மற்றும் ஸ்டார் மிஸ் பேஸ் ஆப் இந்தியா (2021) ஆகிய பட்டங்களை வென்றவர்.

இவரது நடிப்பில் வெளியான 'ரதி பூவன்கோழி', 'சுமேஷ் மற்றும் ரமேஷ்', 'கைபோல' மற்றும் அடுத்து வரவிருக்கும் படமான 'பரன்னு பரன்னு பரன்னு செல்லன்' ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கது ஆகும்.

தற்போது இவர் 'மையல்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தினை ஏபிஜி. ஏழுமலை இயக்கியுள்ளார். இப்படம் சமூக பிரச்சினையை எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

'மையல்' படத்தில் தனது பணி அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நடிகை சம்ரித்தி, 'இந்தப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்