ஸ்பைடர் மேன் நடிகர் டாம் ஹாலண்டுடன் பணிபுரிந்தது பற்றி பகிர்ந்த ஜெண்டயா
|டாம் ஹாலண்ட் நடித்த ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் ஜெண்டயா.
வாஷிங்டன்,
பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகை மற்றும் பாடகராக இருப்பவர் ஜெண்டயா. சிறுவயதிலையே திரையுலகில் ஆர்வம் கொண்டு தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றி வந்த இவர், டாம் ஹாலண்ட் நடித்த ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார்.
அதனைத்தொடர்ந்து டாம் ஹாலண்டுடன், ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம், ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் ஆகிய படங்களில் நடித்தார். அதேபோல், டூன் பார்ட் 1, டூன் பார்ட் 2 என பல ஹிட் படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், நடிகர் டாம் ஹாலண்டுடன் பணிபுரிந்தது பற்றி நடிகை ஜெண்டயா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'டாம் ஹாலண்ட் மிகவும் திறமையானவர். சோர்வாக இருந்தாலும் கூட தனது 1,000 சதவீதத்தை படத்தில் கொடுப்பார். அதற்காக அவரை மிகவும் பாராட்டுகிறேன். நான் அவருடன் பணிபுரிவதை எப்போதும் விரும்புகிறேன். ஏனென்றால், அவருடன் பணிபுரியும்போது மிகவும் பாதுகாப்பாக உணர்வேன்' என்றார்.
தற்போது இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படத்தில் நடிகர் டாம் ஹாலண்டும் நடிகை ஜெண்டயாவும் நடிப்பதாக தகவல் பரவியுள்ளது.