சர்வதேச திரைப்பட விழாவில் சூரி நடித்த 'ஏழு கடல் ஏழு மலை'
|சர்வதேச திரைப்பட விழாவில் இன்று 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.
சென்னை,
'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் ராம். இவர் 'பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் நிவின் பாலியை வைத்து 'ஏழு கடல் ஏழு மலை' எனும் படத்தை இயக்கினார்.
'மாநாடு' படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்திருந்தார். கதாநாயகியாக அஞ்சலி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ரொமேனியா நாட்டின் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் இன்று 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் 'நோ லிமிட்' எனும் பிரிவில் திரையிடப்பட இருக்கிறது. முன்னதாக, ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.