வேதிகா நடித்துள்ள யாக்ஷினி ஓ.டி.டி தளத்தில் வெளியானது
|வேதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் யாக்ஷினி இணைய தொடர், ஓ.டி.டி தளத்தில் வௌியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் வேதிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மதராசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அவர் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடித்த முனி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். சிம்பு நடித்த காளை படத்தில் நடித்தார். இருப்பினும் 2013-ம் ஆண்டு பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை திருப்பினார் வேதிகா. இதைத் தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த வேதிகா, நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டார். பிறகு மீண்டும் லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் நாயகியாக நடித்தார். மேலும், பாபி சிம்ஹா நடித்த ரஸாகர் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் பேட்ட ராப் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், வேதிகா மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் யாக்ஷினி இணைய தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வௌியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் இந்த தொடர் வெளியிடப்பட்டுள்ளது.