< Back
சினிமா செய்திகள்
சமந்தாவுடன் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன் - நடிகர் அதர்வா
சினிமா செய்திகள்

சமந்தாவுடன் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன் - நடிகர் அதர்வா

தினத்தந்தி
|
24 Nov 2024 6:14 AM IST

சமந்தாவுடன் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று நடிகர் அதர்வா கூறியுள்ளார்.

சென்னை,

'பானா காத்தாடி' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. இவர் முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, ஈட்டி, இமைக்கா நொடிகள், குருதி ஆட்டம், பட்டத்து அரசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் அதர்வா மனம் திறந்து பேசினார்.

அப்போது அவர், "வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதே என் தேடல். அதில் நான் எச்சரிக்கையாகவே இருக்கிறேன். ஒரே ரோலில் நடிக்க நான் மட்டுமல்ல, யாருமே விரும்புவதில்லை. என் முதல் படமான பானா காத்தாடியில் சமந்தாவுடன் நடித்தேன். எனக்கு பிடித்த ஸ்பெஷலான கதாநாயகி எப்போதுமே சமந்தாதான். அவருடன் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நடிக்கலாம். மீண்டும் மீண்டும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.

மற்றவர்களின் மனதை படிக்கும் வரம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி வரம் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. அதேபோல எனக்குள் இருக்கும் 'நெகட்டிவிட்டி'யை எரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் நிராகரித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் அதற்காக நான் வருத்தப்பட்டது இல்லை. அந்த படங்களையும் ஒரு சினிமா ரசிகராக நான் பார்ப்பேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்