< Back
சினிமா செய்திகள்
சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் இரண்டாவது இடம்தான் - நித்யா மேனன்
சினிமா செய்திகள்

'சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் இரண்டாவது இடம்தான் - நித்யா மேனன்

தினத்தந்தி
|
8 Jan 2025 9:25 AM IST

பெண்களுக்கு சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் இரண்டாவது இடம்தான் என்று நித்யா மேனன் கூறினார்.

சென்னை,

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில், நித்யாமேனன், கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவி, மிஷ்கின், அனிருத், ஏ.ஆர்.ரகுமான் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

அப்போது பேசிய நித்யா மேனன், பெண்களுக்கு சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் இரண்டாவது இடம்தான் என்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,

'பொதுவாகவே ஒரு காதல் படம் என்றால் எளிதாக நடிக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது அப்படி இல்லை. ஒரு படத்தில் முக்கியமான ஒரு காதாபாத்திரத்தில் நடித்தாலும் நாம் 2-வதாகதான் இருப்போம். அது சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ளது' என்றார்.

மேலும் செய்திகள்