'அதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்' - நடிகை அனுபமா
|மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படம் மூலம் சினிமாவில் நுழைந்தவர் அனுபமா.
சென்னை,
பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுபமா. இவர் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி, ஜெயம் ரவியுடன் சைரன், அதர்வாவுடன் தள்ளிப்போகாதே ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 9 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில், 'கதாநாயகியாக விதம்விதமான கதாபாத்திரங்களில் நடிப்பது வேறு. வில்லியாக நடிப்பது வேறு. எனக்கு ஒரு படத்திலேனும் முழுமையான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.
வில்லியாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற வேண்டும் என்பது எனது கனவு. சில படங்களில் நடிகைகள் வில்லியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதை பார்க்கும் போதெல்லாம் இந்த மாதிரி வில்லி வாய்ப்புகள் எனக்கு மட்டும் ஏன் வரவில்லை என்று யோசிப்பேன்.
வில்லியாக நடிக்கும் நடிகைகளின் நடிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். வில்லி வாய்ப்பு எந்த மொழி படத்தில் கிடைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். அதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்' என்றார்.