< Back
சினிமா செய்திகள்
Will Venom come to face Spider-Man again? - Answered by actor Hardy
சினிமா செய்திகள்

மீண்டும் ஸ்பைடர் மேனுடன் மோத வருமா வெனம்? - நடிகர் டாம் ஹார்டி பதில்

தினத்தந்தி
|
20 Oct 2024 8:22 AM IST

டாம் ஹார்டி நடிப்பில் உருவாகியுள்ள 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' படம் வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது

சென்னை,

ஸ்பைடர் மேன் படங்களில் வந்த 'வெனம்' கேரக்டரை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2018-ம் ஆண்டு ரூபன் பிளீஷர் இயக்கத்தில் 'வெனம்' படம் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்ற இதில், டாம் ஹார்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம், வெனம் : லெட் தேர் கிரேனஜ் என்ற பெயரில் வெளியானது. ஆன்டி செர்க்கிஸ் இயக்கி இருந்த இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. தற்போது, இப்படத்தின் மூன்றாம் மற்றும் இறுதிபாகமாக 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' உருவாகியுள்ளது.

டாம் ஹார்டி நடிப்பில் கெல்லி மார்செல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற 25-ம் தேதி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அப்போது ரசிகர்களிடம் பேசிய ஹார்டி, ஸ்பைடர் மேனுடன் திரையில் மோத விரும்புவதாகவும், இன்று அதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

கடந்த 2007-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஸ்பைடர் மேன் 3'. இப்படத்தில் வந்த வெனம் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதன்பிறகு வெளியான ஸ்பைடர்மேன் படங்களில் முக்கிய வில்லனாக வெனம் இருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்