< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பொங்கலுக்கு வெளியாகும் 'விடாமுயற்சி' திரைப்படம் ?
|11 Sept 2024 3:54 AM IST
விடாமுயற்சி படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன.
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்தநிலையில், விடாமுயற்சி படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது . இந்த நிலையில் பட வேலைகள் எதிர்பார்த்த நாட்களுக்குள் முடியாததால் விடாமுயற்சி திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.