< Back
சினிமா செய்திகள்
Will some scenes be deleted in

image courtecy:indstagram@LycaProductions

சினிமா செய்திகள்

'இந்தியன் 2' படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கமா?

தினத்தந்தி
|
14 July 2024 1:20 PM IST

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன் 2' படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 12-ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேவையற்ற சில காட்சிகளை குறைத்திருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தநிலையில், படத்தில் எதிர்மறையான விமர்சனங்களை தவிர்க்க படக்குழு இந்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்