< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாகும் ஷார்வரி?

22 Jan 2025 1:36 PM IST
கார்த்திக் ஆர்யன் கடந்த ஆண்டு வெளியான சந்து சாம்பியன் படத்தில் நடித்திருந்தார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன். இவர் கடந்த ஆண்டு வெளியான புல் புலையா 3, சந்து சாம்பியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் தற்போது பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் 'து மேரி மைன் தேரா மைன் தேரா து மேரி' படத்தில் நடிக்க உள்ளார்.
சமீர் வித்வான்ஸ் இப்படத்தை இயக்குகிறார். தற்போது இப்படத்தின் நடிகை, நடிகர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஷார்வரி வாக் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷார்வரி வாக் கடந்த ஆண்டு வெளியான முஞ்யா, மஹராஜ் மற்றும் வேதா படங்களில் நடித்திருந்தார். இதில், அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.