புஷ்பா 2 வசூல் சாதனையை முறியடிக்குமா ரன்பீர் கபூரின் ராமாயணம், அனிமல் 2?
|அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் ரூ.1,799 கோடிக்கு மேல் வசூலித்து வரலாறு படைத்துள்ளது.
சென்னை,
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியான புஷ்பா 2, கடந்த ஆண்டு வெளியாகி அதிக வசூல் செய்த ஸ்ட்ரீ 2 மற்றும் கல்கி 2898 ஏடி உள்ளிட்ட படங்கள் மட்டுமில்லாமல் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்து அதிக வசூல் செய்த படங்களில் டாப் இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில், இந்த சாதனையை ரன்பீர் கபூரின் அனிமல் 2 மற்றும் ராமாயணம் படங்கள் முறியடிக்கும் என்று ரசிகர்கள் இணையத்தில் கருத்து பகிர்ந்து வருகின்றனர். அதன்படி, ஒருவர், ராமாயணம் படத்தின் முதல் பாகம் நன்றாக அமைந்தால் அதன் 2-ம் பாகம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்பதை யாராலும் தடுக்க முடியாது என்றும் மற்றொருவர், வார் 2 படத்தில் நட்சத்திரங்களுக்கு பஞ்சம் இல்லை என்பதால் கதை நன்றாக இருக்கும் பட்சத்தில் இதுவும் அதிக வசூல் செய்யும் என்றும் பதிவிட்டுள்ளனர்.
மேலும், அனிமல் வெளியாகி ஒரு வருடம் ஆகியும் அந்த படத்தின் மீதான பரபரப்பு இன்னும் குறையாமல் உள்ளது. இதனால், இதன் 2-ம் பாகம் நிச்சயம் பல கோடி வசூலிக்க வாய்ப்புள்ளது எனவும் சிலர் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.