< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'கல்கி 2898 ஏடி படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்கிறாரா தீபிகா படுகோன்? - தயாரிப்பாளர்கள் பதில்
|24 Nov 2024 9:22 PM IST
தற்போது, கல்கி 2898 ஏடி படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இவர், சமீபத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான 'கல்கி 2898 ஏடி' படத்தில் சுமதியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவருடன் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ஷோபனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
தற்போது, கல்கி 2898 ஏடி படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், நேற்று கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட வைஜெயந்தி மூவீஸ் தயாரிப்பாளரின் சகோதரிகள் பிரியங்கா தத் மற்றும் ஸ்வப்னா தத் ஆகியோர் 'கல்கி 2898 ஏடி படத்தின் 2-ம் குறித்து அப்டேட் கொடுத்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,
'கல்கி 2898 ஏடி படத்தில் இரண்டாம் பாகத்தின் 30-35 சதவீதம் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டது. படத்தின் சில காட்சிகளில் தீபிகா அம்மாவாக இருப்பார்' என்றார்.