'இதனால்தான் என் படங்களில் பஞ்ச் டயலாக்குகள் இல்லை' - துல்கர் சல்மான்
|படங்களில் பஞ்ச் டயலாக்குகளை தவிர்ப்பது ஏன் என்பது குறித்து துல்கர் சல்மான் பகிர்ந்துள்ளார்
சென்னை,
மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான 'சீதா ராமம்' படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதில், மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தற்பொழுது துல்கர் சல்மான் 'லக்கி பாஸ்கர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேற்று தீபாவளியன்று வெளியானது. 'லக்கி பாஸ்கர்' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்நிலையில், படங்களில் பஞ்ச் டயலாக்குகளை தவிர்ப்பது ஏன் என்பது குறித்து துல்கர் சல்மான் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'பெரிய சூப்பர் ஸ்டார்கள் மட்டுமே பஞ்ச் டயலாக்குகளை கூற தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். அதை புது முக நடிகர்கள், இளம் நடிகர்கள் முயற்சி செய்தால், இந்த டயலாக்கை கூற அவர்கள் இன்னும் வளர வேண்டும் ரசிகர்கள் எண்ணுவார்கள். இதை ரசிகர்களால் ஏற்கவும் முடியாது. நான் பஞ்ச் டயலாக்குகளை பேச இன்னும் சிறிது காலம் ஆகலாம்' என்றார்.