'இவர்கள் யார்?' - எதிர்மறையான விமர்சனத்தால் கடுப்பான தயாரிப்பாளர்
|கஜோல், கிருத்தி சனோன் நடிப்பில் சமீபத்தில் ஓ.டி.டியில் வெளியான படம் 'டூ பட்டி'.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகைகளான கஜோல், கிருத்தி சனோன் நடிப்பில் சமீபத்தில் ஓ.டி.டியில் வெளியான படம் 'டூ பட்டி'. இயக்குனர் ஷஷாங்கா சதுர்வேதி இயக்கிய இப்படத்தை கனிகா தில்லான் மற்றும் கிருத்தி சனோன் இணைந்து தயாரித்தனர்.
கிருத்தி சனோன் இரண்டு வேடங்களில் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தநிலையில், எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த விமர்சனங்களை கண்டு கடுப்பான கனிகா தில்லான், 'இவர்கள் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'அனைவரும் இன்று விமர்சகர்களாக இருக்கலாம். ஆனால், தற்போது வரும் விமர்சனங்கள் அனைத்தும் டுரோல்களாகவே இருக்கின்றன. நியாயமாக கூறும் ஒரு சில விமர்சகர்களின் கருத்தை மட்டுமே நான் ஏற்பேன். இவர்கள் யார்? அவர்களுக்காக நாங்கள் படம் தயாரிக்கவில்லை. இதற்கு நான் எந்த பதிலும் தெரிவிக்கப்போவதில்லை.
நான் கேள்விப்பட்ட விஷயம் என்னவென்றால், படத்தின் கடைசி 50 நிமிடங்களை ரசிகர்கள் மிகவும் பாராட்டி உள்ளனர்' என்றார்.