'எங்கு எப்படி இருக்க வேண்டுமோ அங்கு அப்படி இருந்தால்தான்...' - கவர்ச்சி குறித்து பேசிய ராஷ்மிகா
|ராஷ்மிகா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன.
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் 'சுல்தான்', 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் நடித்த 'அனிமல்' இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
தற்போது ராஷ்மிகா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன. ரசிகர்கள் புகைப்படத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்திக்கு போனதும் கவர்ச்சியில் எல்லை மீறி விட்டார் என்றும் சிலர் விமர்சித்து உள்ளனர்.
இதற்கு பதில் அளித்து ராஷ்மிகா மந்தனா கூறும்போது, "ரோம் நகரில் இருப்பவர்கள் ரோமன்கள் மாதிரிதான் வாழ வேண்டும். இது பெரியவர்கள் சொன்ன வாக்கு. நான் அதை கச்சிதமாக கடைபிடிக்கிறேன். பாலிவுட்டில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வாய்ப்புகள் வரும். ஆனாலும் நடிகையாக கவர்ச்சியில் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. அவற்றை எப்போதும் மீறமாட்டேன். எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழி பெண்ணாக மாறிவிடுவது எனக்கு பிடிக்கும்'' என்றார்.