பிருத்விராஜின் 'காளியன்' படப்பிடிப்பு எப்போது? - வெளியான முக்கிய தகவல்
|கடந்த 2017-ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட படம் ‘காளியன்’
சென்னை,
நடிகர் பிருத்விராஜ் தமிழில் 'கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும், பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஆடு ஜீவிதம்' மற்றும் 'குருவாயூர் அம்பலநடையில்' என்ற இரண்டு படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இதற்கிடையில், நடிகர் பிருத்விராஜ் மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டு கிடப்பில் கிடக்கும் பிருத்விராஜின் 'காளியன்' படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.