< Back
சினிமா செய்திகள்
When will he act with son Dulquer Salmaan? - Mammootty responds
சினிமா செய்திகள்

மகன் துல்கர் சல்மானுடன் நடிப்பது எப்போது? - பதிலளித்த மம்முட்டி

தினத்தந்தி
|
23 Nov 2024 1:17 PM IST

சுமார் 50 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் உள்ளார் மம்முட்டி .

சென்னை,

கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அண்மையில், இவரது நடிப்பில் வெளியான 'டர்போ' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சுமார் 50 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் உள்ளார் மம்முட்டி . இவரது மகனும் நடிகருமானவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றது. இந்நிலையில், துல்கர் சல்மானுடன் இணைந்து ஒரே படத்தில் நடிப்பது எப்போது என்ற கேள்விக்கு மம்முட்டி பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'அது நடக்கலாம். அதற்கு சில காலம் ஆகலாம்" என்றார். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'பிக் பி' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ள 'பிலால்' படத்தில் முன்னதாக மம்முட்டியும், துல்கர் சல்மானும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின. இயக்குனர் அமல் நீரத் விரைவில் 'பிலால்' படத்தில் பணியில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டாலும், மற்ற அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாக வில்லை.


மேலும் செய்திகள்