மோகன்லாலின் தந்தையாக நடித்த மம்முட்டி - எப்போது தெரியுமா?
|மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் பல்வேறு திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
சென்னை,
சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியும், மோகன்லாலும் பல வருடங்களாக மலையாள சினிமாவில் நடித்து வருகிறார்கள். இருப்பினும் முன்பு ஒரு படத்தில், இருவரும் தந்தை மற்றும் மகனாக ஒன்றாக திரையைப் பகிர்ந்து கொண்டனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், ஜிஜோ புன்னூஸ் இயக்கத்தில் கடந்த 1982 ம் ஆண்டு வெளியான படையோட்டத்தில் இருவரும் தந்தை மற்றும் மகனாக நடித்தனர். 9 வயது வித்தியாசம் மட்டுமே இருந்தபோதிலும் அப்பா, மகனாக இப்படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் பல்வேறு திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்,பல்துறை வேடங்களிலும், தனித்துவமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
மம்முட்டி கடைசியாக வைசாக் இயக்கிய 'டர்போ' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. தற்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.
மறுபுறம், மோகன்லால் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேன்டசி திரைப்படமான 'பரோஸ்' வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார்.