திருமணம் எப்போது? நடிகை பிரியா பவானி சங்கர் பதில்
|நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய திருமணம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
சென்னை,
நடிகை பிரியா பவானி சங்கர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான "மேயாத மான்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல' என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான "இந்தியன் 2" திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் வருகிற 15-ம் தேதி வெளியாகவுள்ள டிமான்டி காலனி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இவர் கடந்த சில ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். இவர் தனது காதலருடன் ஆஸ்திரேலியா சென்று, அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு அடுத்த வருடம் தன் காதலரை திருமணம் செய்து கொள்ளபோவதாக பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.