< Back
சினிமா செய்திகள்
கைகள் நடுக்கம்.. முகம் வீக்கம்..விஷாலுக்கு என்ன ஆச்சு? வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
சினிமா செய்திகள்

கைகள் நடுக்கம்.. முகம் வீக்கம்..விஷாலுக்கு என்ன ஆச்சு? வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
6 Jan 2025 2:48 AM IST

விஷால் தனது உடல் நலனில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் சண்டக்கோழி, தாமிரபரணி என பல அதிரடி ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகளில் ஒருவராக உள்ளார். நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கும் விஷால் படு ஆக்டிவாக இயங்க கூடியவர்.

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக படம் திரைக்கு வந்த நிலையில் வரும் 12 ஆம் தேதி மதகஜ ராஜா படம் நாங்களும் போட்டிக்கு வரலாமா? என ரீ ரீலிஸ் ஆக உள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், சென்னையில் பிரி ரீலிஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், டைரக்டர் சுந்தர் சி, உள்ளிட்டோர் பங்க்கேறனர். இந்த நிகழ்ச்சியை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசினார். விஷாலிடம் அவர் பல்வேறு கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தார். பேசிக்கொண்டு இருக்கும் போது, நடிகர் விஷாலின் கைகள் பயங்கரமாக நடுங்கியது.

இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது. ஆக்ஷன் ஹீரோவாக பட்டையை கிளப்பிய விஷாலை இப்படி பார்க்க வருத்தமாக இருக்கிறது என அவரது ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருத்தம் அடைந்து வருகிறார்கள். அதேபோல, விஷால் தனது உடல் நலனில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும் என அவருக்கு ஆலோசனையும் வழங்கி வருகிறார்கள்.

விஷாலுக்கு கை நடுக்கம் மட்டும் இன்றி குரலும் நடுக்கத்துடன் தான் உள்ளது எனவும் சில நெட்டிசன் கள் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் அடிப்பதாகவும், பட புரோமசனுக்காக காய்ச்சலுடன் வந்ததால் தான் அவரது கைகள் நடுக்கம், குரலில் பதற்றம் இருந்ததாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய விஷால் கூறியதாவது:- ஜெமினி பட தயாரிப்பு நிறுவனம் மீண்டும் முழுமையாக தயாரிப்பு பணிக்கு வர வேண்டும். இந்த ஆண்டில் சிறந்த நடிகருக்கான விருது எனக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் சிறந்த பாடகருக்கான விருது கிடைக்கும். படப்பிடிப்பு சமயத்தில் நடந்த ஒரு விஷயத்தை நான் நினைவுகூற விரும்புகிறேன். விஜய் ஆண்டனி என்னிடம் வந்து , 'எனக்கு ஒரு பாடகர் தேவைப்படுகிறார். அவர் இனிமேல் பாடவேக்கூடாது. அப்படி ஒரு பாடகர், நீங்கள்தான்' என்றார்.. எனக் கூறினார். விஷால் இந்த நிகழ்ச்சியில் பேசும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

மதகஜராஜா படத்தில், நடிகர் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது. 2013ம் ஆண்டில் இந்த படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் தான் மிக நீண்ட தாமதத்திற்கு பிறகு அதாவது கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து வரும் பொங்கல் ரேசில் களம் இறங்குகிறது.

மேலும் செய்திகள்