< Back
சினிமா செய்திகள்
What a film...- Rajinikanth praises the crew of Kalki 2898 AD
சினிமா செய்திகள்

'என்ன ஒரு படம்...'-'கல்கி 2898 ஏடி' படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்

தினத்தந்தி
|
29 Jun 2024 12:14 PM IST

நடிகர் ரஜினிகாந்த் 'கல்கி 2898 ஏடி' படத்தை பாராட்டியுள்ளார்.

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார்.

இதனிடையே, கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், கல்கியை பார்த்தேன். என்ன ஒரு படம். இயக்குனர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை வேர லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டார். நாக் அஸ்வின், அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் படக்குழுவுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துகள். இரண்டாம் பகுதிக்காக காத்திருக்கிறேன், இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியான ஒரேநாளில் 180 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் 95 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்று மற்றும் நாளை வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் விரைவில் ரூ. 400 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்