< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'என் படத்தை ஓ.டி.டியில் பார்க்காமல் திரையரங்குகளில் பாருங்கள்' - பிரபல தெலுங்கு நடிகர்
|27 Nov 2024 5:16 PM IST
ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ் நடித்துள்ள படம் ஜீப்ரா
சென்னை,
பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ். இவர் தற்போது நடித்துள்ள படம் 'ஜீப்ரா'. ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், பிரியா பவானி சங்கர், ஜெனிபர் பிசினாடோ, சுனில், சத்யராஜ், கருடா ராம் உள்ளிட்ட பலர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கடந்த 22-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவரும்நிலையில், நடிகர் சத்யதேவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சத்யதேவ் விடுத்துள்ள பணிவான வேண்டுகோள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, 'ஜீப்ராவை ஓ.டி.டியில் பார்க்காமல் திரையரங்குகளில் பார்க்குமாறு பார்வையாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.