< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.யில் வெளியானது `ரத்னம்
ஓ.டி.டி.

ஓ.டி.டி.யில் வெளியானது `ரத்னம்'

தினத்தந்தி
|
23 May 2024 8:43 PM IST

நடிகர் விஷால், பிரியா பவானி ஷங்கர் நடித்த `ரத்னம்' படம் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.

சென்னை,

மார்க் ஆண்டனியின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

விஷால் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் மூன்றாவது முறை இணைந்து நடித்த திரைப்படம் ரத்னம் ஆகும். இதற்கு முன் அவரது இயக்கத்தில் தாமிரபரணி மற்றும் பூஜை படத்தில் நடித்துள்ளார். ரத்னம் திரைப்படம் விஷாலுக்கு 34- வது திரைப்படமாகும்.

பிரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தை ஸ்டோன் பென்ச் சார்பாக கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.


படத்தின் ஆக்சன் காட்சிகளும், படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் ஷாட் காட்சி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. தற்பொழுது ரத்னம் திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்