பொங்கல் ரேஸில் இணைந்த விஷாலின் 'மதகஜராஜா'
|இப்படம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையையொட்டி பல படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர், அருண் விஜய் நடித்துள்ள வணங்கான், கலையரசன் நடித்திருக்கும் மெட்ராஸ்காரன் ஆகிய படங்கள் பொங்கலை முன்னிட்டு வரும் 10-ம் தேதியே திரைக்கு வருகிறது.
அதேபோல், ஜெயம் ரவி நடித்துள்ள காதலிக்க நேரமில்லை மற்றும் அதிதி ஷங்கர் நடித்திருக்கும் நேசிப்பாயா ஆகிய படங்கள் 14-ம் தேதியும், சண்முக பாண்டியன் நடித்துள்ள படை தலைவன், கிஷன் தாஸ் நடித்திருக்கும் தருணம், சிபி சக்கரவர்த்தி நடித்துள்ள டென் ஹவர்ஸ் ஆகிய படங்கள் பொங்கலுக்கும் வெளியாக உள்ளன.
இந்நிலையில், இந்த பொங்கல் ரேஸில் விஷால் நடித்துள்ள 'மதகஜராஜா' திரைப்படமும் இணைந்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால், சந்தானம், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் 2013 பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.