'இவர்களுக்கு திருமணமான பிறகுதான் எனக்கு' - விஷால்
|விஷால் தனது திருமணம் எப்போது என்பது குறித்து பேசியுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். தற்போது இவருக்கு வயது 46. ஆனால் இதுவரை இவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதனால் இவரது ரசிகர்கள் விஷாலின் திருமணம் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விஷால், தான் எப்போது திருமணம் செய்துகொள்வேன் என்பது குறித்து பேசியுள்ளார். அப்போது அவர், தான் தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்தபிறகு திருமணம் குறித்து யோசிப்பதாகவும் ஆனால், சல்மான்கான், சிம்பு மற்றும் பிரபாஸ் ஆகியோருக்கு திருமணமான பிறகுதான் தனக்கு திருமணம் என்றும் கூறியுள்ளார்.
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ரத்னம். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி இருக்கிறார். இது விஷாலுக்கு 34- வது படமாகும். இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார். இப்படம் கடந்த மாதம் 26-ந் தேதி தியேட்டர்களில் வெளியானது.