< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'இறுதியாக .... இந்த நாளுக்காக ... '- நஸ்ரியா பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்
|24 Jun 2024 7:27 PM IST
நடிகை நயன்தாராவும், நஸ்ரியாயும் அட்லி இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படத்தில் நடித்திருந்தனர்.
சென்னை,
நடிகை நயன்தாராவும், நஸ்ரியாயும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இருவரும் தமிழில் அட்லி இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படத்தில் நடித்திருந்தனர்.
இருவரும் நல்ல உறவைப் பேணி வருகின்றனர். இந்நிலையில், நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன் பகிர்ந்த பதிவில், 'இறுதியாக .... இந்த அன்பான நாளுக்காக எங்களுக்கு இவ்வளவு நேரம் ஆனது' இவ்வாறு எழுதியுள்ளார்.
நஸ்ரியாவின் இந்த பதிவை வைத்துப் பார்க்கும்போது, நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சந்தித்துள்ளதாக தெரிகிறது. மேலும், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து 'மறக்கமுடியாத இரவு' என்று பதிவிட்டுள்ளார்.