< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

'சார்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு

தினத்தந்தி
|
15 Oct 2024 8:44 PM IST

நடிகர் விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.

சென்னை,

சின்னத்திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020-ம் ஆண்டு 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். தற்போது இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் 'சார்' படத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார்.

இப்படத்தில் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுகிறது. முதலில் மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என தலைப்பிடப்பட்ட படம் ஒரு சில காரணத்தினால் தற்பொழுது "சார்" என மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இப்படம் வருகிற 18-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்