சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் '12-த் பெயில்'
|விது சோப்ரா இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி வெளியான திரைப்படம் '12-த் பெயில்'.
சென்னை,
ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. இன்று இந்த விழாவின் கடைசி நாளாகும். இந்நிலையில், இந்த விழாவில் விது சோப்ரா இயக்கத்தில் விக்ராந்த் மாஸ்ஸி நடித்த '12-த் பெயில்' படம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விது சோப்ரா இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி வெளியான திரைப்படம் '12-த் பெயில்'. இந்தி, தமிழ், தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், ஆனந்த் வி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் மனோஜ்குமார் ஷர்மா ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி ஸ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ்ஸின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது.
இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி ஓடிடியில் வெளியான பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது. மேலும் சிறந்த படத்திற்கான பிலிம் பேர் விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.