மறைந்த பாடகர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் சேர்ந்து பாடிய விக்ரம் - எந்த படத்தில் தெரியுமா?
|விக்ரம் நடிப்பு மட்டுமில்லாமல் பல படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார்.
சென்னை,
1990ம் ஆண்டு 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார் விக்ரம். இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு சில மலையாள படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தார்.
பின்னர், 2003ல் இவரது நடிப்பில் வெளிவந்த 'பிதாமகன்' திரைப்படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அதனைத்தொடர்ந்து, பல படங்களில் நடித்து வரும் விக்ரம் கடைசியாக 'தங்கலான்' படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.
விக்ரம் நடிப்பு மட்டுமில்லாமல் பல படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார். அதன்படி, மறைந்த பாடகர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இவர் ஒரு பாடலை பாடி இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம். கடந்த 2010-ம் ஆண்டு ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான 'மதராசபட்டினம்' படத்தில் இடம்பெற்ற 'மேகமே மேகமே' பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன், விக்ரம், நாசர் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பாடி இருக்கிறார்கள்.