ஓ.டி.டியில் விஜய்யின் 'தி கோட்' - வெளியான தகவல்
|நீளம் கருதி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள், ஓ.டி.டியில் வெளியாகும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் கூறி இருந்தார்.
சென்னை,
விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தி கோட். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்தனர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'தி கோட்' படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ. 440 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. நீளம் கருதி இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியாகும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் கூறி இருந்தார்.
இந்நிலையில், தி கோட் படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 3-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தி கோட் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.