< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

'கோட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

தினத்தந்தி
|
17 Aug 2024 11:44 AM GMT

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'கோட்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். மேலும், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையானவராக காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு. எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.

நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான 'விசில் போடு' வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இரண்டாவது பாடலான 'சின்ன சின்ன கண்கள்' விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. இப்படத்தின் 3வது பாடலான `ஸ்பார்க்' வெளியாகி வைரலானது.

'கோட்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. திரைப்படம் ஒரு பக்கா ஆக்சன் திரைப்படமாக அமைந்துள்ளது. டிரெய்லரில் இடம் பெற்ற வசனங்கள் மிகவும் அசத்தலாக உள்ளது. விஜயின் மகனாக வரும் இளைய விஜய் கதாப்பாத்திரம் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. டிரெய்லரின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'கோட்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் செய்திகள்