< Back
சினிமா செய்திகள்
Vijays cute picture with his parents SA Chandrasekar & Shoba
சினிமா செய்திகள்

பெற்றோருடன் நடிகர் விஜய் - வைரலாகும் புகைப்படம்

தினத்தந்தி
|
27 May 2024 7:10 PM IST

அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் தனது பெற்றோரை விஜய் சந்தித்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதில், விஜய் இளமையான தோற்ற வேடத்தில் நடிக்கிறார். இதற்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்று திரும்பினார்.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் தனது பெற்றோரை விஜய் சந்தித்துள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்