"நான் வேற.. அப்பா வேற.." - டிரோல்களுக்கு பதிலளித்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா
|விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிக்கும் 'பீனிக்ஸ்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
சென்னை:
விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அதற்குள் ஹீரோவாக அறிமுகமாகி விட்டார். விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிக்கும் 'பீனிக்ஸ்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
அப்பா பெயரை பயன்படுத்த மாட்டேன் என்று பேசிய நீங்கள் தற்போது 'பீனிக்ஸ்' படத்தின் புரொமோசன் பணிக்காக அப்பாவை அழைத்தது ஏன் என்று சூர்யாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர்,
தந்தையர் தினத்தன்று அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பினேன். அதனால் அப்பாவை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்தேன். அப்பா மட்டும் வரவில்லை, என்னோட அம்மா சகோதரி என அனைவரும் வந்துள்ளனர், என பதிலளித்தார்.
பின்னர், அவர் வேறு... நான் வேறு.. என்று நீங்கள் பேசியது நிறைய டிரோல்களை சந்தித்தது அதையெல்லாம் பார்த்தீர்களா? என்கிற கேள்விக்கு பதிலளித்த சூர்யா, பெரிய பெரிய ஆட்களுக்கே டிரோல்கள் குவிகின்றன. நானெல்லாம் எம்மாத்திரம் என்றார்.