< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
'ராபர்' பட டிரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி

19 Feb 2025 8:30 PM IST
இப்படம் மார்ச் 14-ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
சென்னையில் நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே 'ராபர்'படத்தின் கதை. எஸ்.எம்.பாண்டி இயக்கி இருக்கும் இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் திரைக்கதை எழுதியுள்ளார்.
சத்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார். இதில், மார்ச் 14-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.