< Back
சினிமா செய்திகள்
பிரபு தேவா படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
சினிமா செய்திகள்

பிரபு தேவா படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

தினத்தந்தி
|
7 July 2024 3:58 AM IST

பிரபு தேவா நடிக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் பிரபு தேவா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து முசாசி, பேட்ட ராப், வுல்ப் போன்ற படங்களில் பிரபு தேவா நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 'ஜாலியோ ஜிம்கானா' படத்தில் பிரபு தேவா நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் மடோனா செபாஸ்டியன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், சாய் தீனா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் 'ஜாலியோ ஜிம்கானா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டரில் பிரபு தேவா சாண்ட்விச்சிற்குள் இருக்கிறார், அந்த சாண்ட்விச்சை படத்தின் பெண் கதாபாத்திரங்கள் தூக்கி செல்வது போன்று இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்