< Back
சினிமா செய்திகள்
ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய விஜய் சேதுபதி
சினிமா செய்திகள்

'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய விஜய் சேதுபதி

தினத்தந்தி
|
15 Dec 2024 4:52 PM IST

நான் லீனியர் பாணியில் வெளியான ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ படத்தை விஜய் சேதுபதி பாராட்டியுள்ளார்.

சென்னை,

பரத், சுஹைல், ராஜாஜி, அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ள படம், 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. பிரசாத் முருகன் படத்தை இயக்கியுள்ளார். ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த், டிரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் பிஜிஎஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பரத் நடிக்கும் அடுத்த படமான `ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' பர்ஸ் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தின் டிரெய்லரை நடிகர் அருண்விஜய் மற்றும் சுரேஷ் காமாட்சி இணைந்து வெளியிட்டனர். திரைப்படம் கடந்த 13ம் தேதி வெளியானது.

நான் லீனியர் பாணியில் நான்கு வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி விறுவிறுப்பாக வெளியாகி உள்ள படம்தான் தற்போது திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. இதற்கு முன் அப்படி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் லோகேஷ் கனகராஜுன் 'மாநகரம்'

'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' படம் பார்த்த பலரும் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது வேறு ஒரு கதைக்களத்தில் வேறு ஒரு கோணத்தில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது என்கிற கருத்தை தவறாமல் வெளிப்படுத்தினார்கள். இப்படி மவுத் டாக் மூலம் படம் பற்றிய செய்தி வெளியே பரவ, தற்போது திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தகவல் நடிகர் விஜய் சேதுபதியின் கவனத்திற்கும் சென்றது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கும் இந்த படத்தை பார்க்கும் ஆவல் எழவே அவருக்கு சிறப்பு காட்சியாக 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டப்பட்டது. படம் பார்த்த விஜய் சேதுபதியும் படக்குழுவினரை நேரில் அழைத்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். படத்தில் நடித்த கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியின் இந்த பாராட்டு படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை தந்துள்ளது.

மேலும் செய்திகள்