< Back
சினிமா செய்திகள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி
சினிமா செய்திகள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி

தினத்தந்தி
|
26 Nov 2024 8:25 PM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

பிரபல இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்தவர் மாரி செல்வராஜ். 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 'கர்ணன், மாமன்னன்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்து வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான 'வாழை' படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் 'பைசான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். கபடியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்திற்குப் பின் மாரி செல்வராஜ் - கார்த்தி கூட்டணியில் திரைப்படம் உருவாகிறது. அடுத்தாண்டு துவக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி - மாரி செல்வராஜ் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையும் துவங்கியுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது மாரி செல்வராஜ ஒப்புக் கொண்டுள்ள பட பணிகளை முடித்த பிறகு இந்த பட பணிகள் ஆரம்பிக்கும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்