'தளபதி 69' படப்பிடிப்பின்போது ராணுவ வீரர்களை சந்தித்த விஜய்
|'தளபதி 69' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சென்னை,
நடிகர் விஜய் தனது கடைசி படமான 'தளபதி 69' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அஜித்தின் துணிவு, வலிமை படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். இதில், விஜய்யுடன், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. முன்னதாக இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் அகாடமியில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், அங்குள்ள ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விஜய் சந்தித்துள்ளார். அவர்களுடன் விஜய், புகைப்படங்களையும் எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.